சென்னை: 'நோய் தொற்று பரவாமல் இருக்க, விழிப்புடன் இருப்போம்' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் அறிக்கை: எட்டு வாரங்களாக உலகையே உலுக்கி வரும், 'கொரோனா' வைரஸ் மூன்று வாரங்களாக, இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இதுவரை, பாதித்தோரின் எண்ணிக்கை, 105 தான் என்றாலும், அடுத்து வர உள்ள, இரண்டு வாரங்கள் மிக முக்கியமானவை. இத்தாலி, சீனா, ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளில், பாதித்தோரின் எண்ணிக்கை, நான்கு மற்றும் ஐந்தாவது வாரத்தில் இருந்து, ஆறு முதல், பத்து மடங்காக அதிகரித்துள்ளது.
விழிப்புடன் இருப்போம்: கமல்