கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா ; பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு உயிர்கள் பலியாகும் நிகழ்வும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கேரளாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று (ஏப்.,1) முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.